முகப்பு
தமிழ்நாடு

ஈட்டி குத்தி சிறுவன் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம்!

ஈட்டி குத்தி சிறுவன் உயிரிழந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு

ஈட்டி குத்தி சிறுவன் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம்!

ஈட்டி குத்தி சிறுவன் உயிரிழந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Updated On : 31 ஜூலை, 2024 at 2:00 PM
பகிர்:

கடலூர் அருகே ஈட்டி எறிதல் பயிற்சியின்போது உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் பள்ளியில் ஈட்டி எறிதல் பயிற்சியின்போது எதிர்பாராமல் தலையில் பாய்ந்ததில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் கிஷோர் மூளைச்சாவு அடைந்து பின்னர் உயிரிழந்தார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமுருகனின் மகன் கிஷோர் வடலூரிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நிலையில் ஜூலை 24 அன்று பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஈட்டி எறிதல் பயிற்சியின்போது எதிர்பாதாரவிதமாக சிறுவன் கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்தது.

இதனால், பலத்த காயமடைந்த நிலையில் புதுச்சேரி மற்றும் சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு, பின்னர் ஜூலை 30 அன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →