மதிமுக வேட்பாளர் 
தமிழ்நாடு

வாக்காளர்களே எஜமானர்கள்: துரை வைகோ

வாக்காளர்களே எஜமானர்கள் என்று முக்கிய கட்சி வேட்பாளர் நேர்காணல்

DIN

தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர். திருச்சி நாடாளுமன்ற மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

தற்போது வரை முன்னிலையில் இருப்பது மக்கள் என் மீதும், ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையாகவே பார்க்கின்றேன்.

தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர்.

என் தந்தையிடம் இதுவரை பேசவில்லை, தேர்தலில் நிற்பதற்கு தனிப்பட்ட விருப்பம் எனக்கு இல்லை, எனினும் தொண்டர்களுக்காகவே தேர்தலில் நின்றேன். நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி பெற்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல் & டி பங்குகளை கொள்முதல் தொடர்ந்து, சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்வு!

ஓவல் டெஸ்ட்டில் ஸ்டோக்ஸ் விலகல்..! இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள்!

ரஷியாவில் 11 மணிநேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

என்னடி சித்திரமே... நித்யா மெனன்!

SCROLL FOR NEXT