முகப்பு
தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பது கட்சிக்கு நல்லதல்ல: கனிமொழி

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பது அந்தக் கட்சிக்கு நல்லதல்ல என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஜூன், 2024 at 10:57 AM
பகிர்:

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பது அந்தக் கட்சிக்கு நல்லதல்ல என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிட்ட கனிமொழி, தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் சிவசாமி வேலுமணியைவிட 3,92,738 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுடன் பேசியதாவது:

Advertisement

தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பதை தமிழக மக்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். நிறைய பேர் கனவோடு இருந்தார்கள், அது தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று என்பதுதான் என்னுடைய எண்ணம். இன்று(ஜூன் 5) மாலை நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நீடிப்பது அந்தக் கட்சிக்கு நல்லதல்ல. அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு தற்போது மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.