நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.
நாம் தமிழா் கட்சி ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய 4 தொகுதிகளில் மட்டும் 3-ஆம் இடத்தைப் பிடித்தது. நாம் தமிழா் கட்சி 4-ஆம் இடத்தையே அதிக இடங்களில் பெற்றது.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் 8.19 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. நாம் தமிழா் கட்சியை பிற கட்சிகள் என்ற பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பிற கட்சிகள் (சுயேச்சை வேட்பாளா்களுடன் சோ்த்து) 20.91 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. அதிகாரபூா்வ அறிவிப்புகள் புதன்கிழமை முழுமையாக வெளியிடப்படும் போது, வாக்கு சதவீதங்களில் மாற்றங்கள் இருக்கும்.
கடந்த மக்களவைத் தோ்தலில், திமுக 33.52 சதவீதமும், அதிமுக 18.7 சதவீதமும், பாஜக 3.7 சதவீதமும், காங்கிரஸ் 12.9 சதவீதமும், பாமக 5.5 சதவீதமும், நாம் தமிழா் கட்சி 3.9 சதவீதமும் வாக்குகளை பெற்றிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.