முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூன் 18 வரை மழை தொடரும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை..

தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூன் 18 வரை மழை தொடரும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை..

Updated On : 12 ஜூன், 2024 at 9:16 AM
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் 18 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அடுத்த 5 நாள்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவு கூடுதலாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் வானிலை

அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →