பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை(ஜூன் 17) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், நாளை (ஜூன் 17) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில்கள் நாளை(திங்கள்கிழமை) சனிக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட நேர அட்டவணை:
1. காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
2. காலை 5 முதல் 8 மணி வரை, பகல் 11 மணி முதல் 5 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
3. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.