dot com
தமிழ்நாடு

தந்தையை நினைவுகூர்ந்த முதல்வர் ஸ்டாலின்!

தந்தையர் தின வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு

DIN

இன்று (ஜூன் 16) தந்தையர் தினத்தினை முன்னிட்டு, பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் மற்றும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து, அவர்களது தந்தையுடனிருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், தந்தையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தினையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது, ”தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், பிரணிதா, ராஷி கன்னா, காஜல் அகர்வால், அதுல்யா, அலியா பட், மிருணாள் தாக்கூர் மற்றும் விஜயபிரபாகரன் உள்பட பலரும் அவர்களது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வாழ்த்து தெர்வித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT