முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் 
தமிழ்நாடு

அதிமுக போட்டியிடாததற்கு காரணம் இதுதான்: ப. சிதம்பரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

DIN

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது:

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான பாமகவின் வெற்றி வாய்ப்பை எளிதாக்க மேல் இடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது என்பதற்கான தெளிவான சான்றாகும்.

பாஜக மற்றும் அதிமுக இரண்டும் பிரதிநிதி(பாமக) மூலம் போட்டியிடுகின்றன.

இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று(ஜூன் 15) அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT