முகப்பு
தமிழ்நாடு

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரை நலம் விசாரித்த பிரேமலதா!

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்.

Updated On : 20 ஜூன், 2024 at 4:42 PM
பகிர்:

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு பெண்கள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 22 பேரும், சேலம் மருத்துவமனையில் 10 பேரும் பலியாகியுள்ளனர். விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் பலியாகியுள்ளனர்.

Advertisement

மேலும், கள்ளச்சாரயம் குடித்த 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.