சசிகாந்த் செந்தில் DOTCOM
தமிழ்நாடு

எஸ்.சி., எஸ்.டி., இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை நிறுத்துக: பதவியேற்பில் முழக்கமிட்ட சசிகாந்த் செந்தில்

அரசியல் சாசனத்தை கையில் ஏந்தியபடி பதவியேற்கும் தமிழக எம்பிக்கள்.

DIN

மக்களவை உறுப்பினராக பதவியேற்கும் போது தலித், பழங்குடியினர் மீதான தாக்குதலை நிறுத்துக என்று தமிழக காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் முழக்கமிட்டார்.

18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நேற்றுமுதல் பதவியேற்று வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் வரிசையாக இன்று பிற்பகல் பதவியேற்றனர்.

அப்போது, அரசியல் சாசனத்தை கையில் ஏந்தியபடி தமிழில் பதவியேற்ற திருவள்ளூர் காங்கிரஸ் எம்பியும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில், இறுதியில் தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மீதான கேவலமான தாக்குதலை நிறுத்துக என்று தெரிவித்தார்.

இதனைக் கேட்ட பாஜக எம்பிக்கள் குரல் எழுப்பிய நிலையில், இந்தியா கூட்டணி எம்பிக்கள் எதிர் குரல் எழுப்பியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும், தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்பிக்களும் அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி தமிழில் எம்பியாக பதவியேற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவத்தால் மன உளைச்சல்: தவெக கிளைச் செயலர் தற்கொலை!

கரூா் சம்பவம்: காவல்துறை விசாரணை அதிகாரி மாற்றம்

காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

ஆட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

SCROLL FOR NEXT