அமைச்சர் சேகர்பாபு(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தண்ணீரில் வடை சுடுகிறார் பிரதமர் மோடி: அமைச்சர் சேகர்பாபு

பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை தங்கசாலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று நலதிட்ட உதவிகள் வழங்கியப் பின் அவர் பேசியதாவது:

”தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி ஒருமுறைகூட வரவில்லை. பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார்; எத்தனை முறை அவர் தமிழகத்திற்கு வந்தாலும் டெபாசிட் கூட பெற இயலாது.

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்கவில்லை ”என்று பேசினார்.

நேற்று நடைபெற்ற சென்னை நந்தனம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, சென்னையில் புயல், வெள்ளம் ஏற்பட்டபோது, மக்கள் அவதிப்பட்டதாகவும் ஆனால், திமுக அரசு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக துயரத்தை மேலும் அதிகரிக்கும் வேலையைச் செய்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT