முகப்பு
தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக் கட்சி!

அண்ணா திராவிட முன்னேற்ற கட்சியின் கூட்டணியில் இணைவதாக பார்வர்ட் பிளாக் கட்சி இணைந்தது.

Updated On : 6 மார்ச், 2024 at 5:31 AM
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கதிரவன்.
பகிர்:

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை புதன்கிழமை சந்தித்த பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீடு செய்வதில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

அதிமுகவுடன் தேமுதிக, பாமக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தொடர்ந்து கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, புதிய தமிழகம் கட்சி செவ்வாய்க்கிழமை அதிமுக கூட்டணியை உறுதி செய்த நிலையில், பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவனும் இன்று இபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கதிரவன், தேனி அல்லது தென் மாவட்டங்களில் ஒரு தொகுதி வழங்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →