மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் 
தமிழ்நாடு

மநீம நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு: காரணம் என்ன?

சென்னையில் வியாழக்கிழமை நடைபெறவிருந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னையில் வியாழக்கிழமை நடைபெறவிருந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள மநீம கட்சி, தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.

இந்த சூழலில் சென்னையில் வியாழக்கிழமை(மார்ச்.7) காலை மநீம நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டம்.

இந்த நிலையில்,சென்னையில் வியாழக்கிழமை(மார்ச்.7) காலை நடைபெறவிருந்த மநீம நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என மநீம தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

திமுக குழுவுடன் சந்திப்பு

திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம் தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை குழு திமுக குழுவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் குழு வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT