தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோயில் அகழியில் தீ விபத்து!

DIN

தஞ்சாவூர்: உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலையொட்டி உள்ள அகழியில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு தஞ்சை மட்டுமல்லாது பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பக்தர்கள் அதிகமாக வருகை புரிந்து வருகின்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் முகப்பு பகுதியில் அகழி உள்ளது. இதனை முறையாக பராமரிக்காமல் தண்ணீர் இன்றி, கோட்டை சுவர்கள் சேதமடைந்து அதில் குப்பை கழிவுகளாக உள்ளது.

இந்த நிலையில், ராஜராஜ சோழன் சிலை பின்புறம் உள்ள அகழியில் வியாழக்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்தது.இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

உடனடியாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாநகராட்சி பணியாளர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். சாலையோரக் கடைகளிலிருந்து கொட்டப்பட்ட குப்பைகளில் இருந்து தீ பற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அட்சய திருதியை: நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம்

ஆங்கிலம் முதலிடம்..பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14% தேர்ச்சி!

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

10ம் வகுப்பு: மறுதேர்வு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் எப்போது?

SCROLL FOR NEXT