பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலை சந்திக்கவுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது.
அதிமுகவும், பாஜகவும் கூட்டணியை இறுதி செய்வதற்காக தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், அமமுக கோரிக்கைகளை பாஜகவுக்கு அளித்துள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னதாக பாஜக கூட்டணியில் போட்டியிடுவதாக சமக தலைவர் சரத் குமார் அறிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.