முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நியமனம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமணம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 11 மார்ச் 2024, 5:31 pm IST
மாநில தலைமை தேர்தல் ஆணையம்
பகிர்:

பழனிகுமார் ஓய்வு பெற்றதையெடுத்தை பத்திரப்பதிவுத்துறை செயலராக இருந்த ஜோதி நிர்மலாசாமி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையர் வெ.பழனிகுமார் கடந்த வெள்ளிக்கிழமையுடன் (மாா்ச் 8) பணி நிறைவு பெற்றார்.

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.பழனிகுமாா், 2021-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டாா். இரண்டு ஆண்டுகள் பணிக்காலத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு மே மாதம் மீண்டும் அதே பதவியில் ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டாா். அவரது, நீட்டிக்கப்பட்ட பணிக் காலம் வரும் சனிக்கிழமையுடன் (மாா்ச் 9) நிறைவடைகிறது. சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பணி நாளான வெள்ளிக்கிழமையுடன் பணி நிறைவு பெற்றார்.

Advertisement

Advertisement

இதையடுத்து, புதிய தோ்தல் ஆணையரை நியமிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமணம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments