முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் வருகை: பொள்ளாச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்!

பொள்ளாச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நாளை வழங்குகிறார்.

Updated On : 12 மார்ச், 2024 at 9:31 PM
பகிர்:

முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி கோவை - பொள்ளாச்சி சாலையில் நாளை (மார்ச் 13) போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

பொள்ளாச்சி பகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நாளை வழங்குகிறார்.

இதனால், நாளை காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

Advertisement

கேரளத்திலிருந்து வலையார் வழியாக கனரக வாகனம் கோவைக்கு கருத்தம்பட்டி வழியாகச் செல்லலாம் என்றும்,

உடுமலை நோக்கிச் செல்லும் இலகுரக வாகனங்கள் குள்ளக்காபாளையம் வழியே நெகமம் சாலையில் செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.