தமிழ்நாடு

இபிஎஸ் - பாமக எம்.எல்.ஏ. சந்திப்பு: அதிமுக - பாமக கூட்டணி உறுதி?

DIN

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ. அருள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாமக விரும்பும் 7 மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ஒதுக்க அதிமுக முன்வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக எம்.எல்.ஏ அருள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கூட்டணி தொடர்பாக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இன்று மீண்டும் எம்.எல்.ஏ அருள் சந்தித்துப் பேசினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தூதுவராக எம்.எல்.ஏ. அருள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், அதிமுக- பாமக கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ளநிலையில், பாமக, தேமுதிக என சில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

ஹரியாணாவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி கடிதம்

ராஃபாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனர்கள்: ஐநா கவலை!

வேலூரில் மே 14-ல் உள்ளூர் விடுமுறை!

தொடரிலிருந்து வெளியேறப்போவது யார்?

SCROLL FOR NEXT