எனது விருப்பத்தின் பெயரில் மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை தான் ராஜிநாமா செய்ததாக முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு வருகிறேன் என்றால் எனது அன்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நேரடியாக மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை நான் ராஜினாமா செய்துள்ளேன் எனக் குறிப்பிட்டார்.
தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியை தமிழிசை செளந்தரராஜன் இன்று (மார்ச் 18) ராஜிநாமா செய்தார்.
மக்களவைத் தேர்தலில் தமிழிசை போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்தார். பாஜக சார்பில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழிசை போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.