தமிழ்நாடு

அதிமுக - தேமுதிக தொகுதி ஒப்பந்தம் கையெழுத்து!

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

DIN

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலையொட்டி தொகுதிகளை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியலை இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். அதில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவை எந்தெந்த தொகுதிகள் என இறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்துடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் மேற்கொண்டு, இருவரும் கையெழுத்திட்டனர்.

அதில் தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிடிஇஏ பள்ளிகளில் பயிலும் வடஇந்திய மாணவா்களுக்கு தமிழ்ப் போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT