ஐபிஎல் போட்டி: மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!
ஐபிஎல் போட்டி நுழைவுச்சீட்டை காண்பித்து பார்வையாளர்கள் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கலாம்.
நாளை(மார்ச். 26) நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை காணவரும் பார்வையாளர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகா்கள் போட்டிக்கான ஆன்லைன் நுழைவுச் சீட்டை தங்கள் கைகளில் வைத்திருந்தால் அதை வைத்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் (குளிா்சாதன பேருந்துகள் நீங்கலாக) பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்பு பிற இடங்களிலிருந்து விளையாட்டு மைதானத்துக்கும், போட்டி முடிந்த பின்பு 3 மணி நேரத்துக்குள் விளையாட்டு மைதானத்திலிருந்து பிற இடங்களுக்கும் நுழைவுச் சீட்டை நடத்துநரிடம் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.