செல்வப்பெருந்தகை 
தமிழ்நாடு

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

DIN

திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியும் ஒதுக்கப்பட்டது.

முதல்கட்டமாக கடந்த சனிக்கிழமை புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 7 தொகுதிக்கான வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டது.

மீதமுள்ள திருநெல்வேலி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பெர்ட் போட்டியிடுகிறார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்றிரவுக்குள் அறிவிக்கப்படுவார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் சார்பில் கரூரில் ஜோதிமணி, விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 மாத கர்ப்பிணி, தில்லி போலீஸ் கமாண்டோவை அடித்துக் கொலை செய்த கணவர்! அதிர்ச்சித் தகவல்கள்!

வீட்டுக் கடன் நிறைவடைந்ததும் வங்கியிலிருந்து வாங்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்!

வரம் தரும் வாரம்!

கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டப்படும்: முதல்வர் ஸ்டாலின்

ஓடிடியில் துரந்தர்..! தமிழ் உள்பட 3 மொழிகளில் ரிலீஸ்!

SCROLL FOR NEXT