டிஆர்பி ராஜா DOTCOM
தமிழ்நாடு

பாஜக போன்ற சில்லறை கட்சிகளுக்கு பதிலளிக்க முடியாது: டிஆர்பி ராஜா

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி அதிமுக மட்டுமே -டிஆர்பி ராஜா

DIN

கோவை: பாரதிய ஜனதா போன்ற சில்லறை கட்சிகளுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மாநில தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசியதாவது:

“கோவையில் மகத்தான வெற்றியை திமுக உதயசூரியன் பெறும். எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழப்பார்கள். அதிமுக போன்ற பிரதான கட்சிகளின் கேள்விகளுக்கும், விமர்சனத்துக்கும் மட்டுமே பதில் சொல்வேன். பாஜக போன்ற சில்லரைக் கட்சிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.

களத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளது. பாஜக போன்ற கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்தால் கவனச் சிதறல் ஏற்படும்.” எனத் தெரிவித்தார்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை எதிர்த்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

SCROLL FOR NEXT