பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை (27.03.2024) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி விடுதியில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பா.ம.க. முன்னதாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.