தமிழ்நாடு

தமிழகத்தில் மொத்தம் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 1,403 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

DIN

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மார்ச் 20இல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஆரம்பத்தில் சற்று சுனக்கமாக இருந்தாலும், பின் நாள்களில் அதிகமானோர் ஆர்வத்துடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்ததை காண முடிந்தது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். குறிப்பாகக் கடைசி இரண்டு நாள்களில் ஏராளமானோர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

இன்று (மார்ச்.27) 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 1,403 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1,749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (மார்ச். 28) நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT