நிர்மல், நிகில். 
தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், இரட்டையர்கள் இருவரும் தலா 478 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.

பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் செ.நிகில், செ.நிர்மல் இரட்டைச் சகோதரர்கள். இவர்கள் இருவரும் இன்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் தலா 478 பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரட்டைச் சகோதரர்கள் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து, ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதையடுத்து பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகின. தேர்வெழுதிய மாணவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதால் பரபரப்பு

ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ: உ.பி.யில் இளைஞர் கைது

இன்ஸ்டாகிராம் பதிவால் இளைஞர் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT