கோப்புப்படம் 
தமிழ்நாடு

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

அடுத்த 2 வாரங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை இல்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

DIN

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

அடுத்த 5 நாள்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை படிப்படியாகக் குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

"இன்னும் 5 நாள்களில் வளிமண்டல சுழற்சி உருவாகி தமிழகத்தில் அதிக இடங்களில் மழை பெய்யும். எனவே, அடுத்த 2 வாரங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை இல்லை.

கடந்த 2014 மே மாதம் இதேபோல வளிமண்டல சுழற்சி உருவாகி தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பெரும் மழை பெய்தது எனக்கு நினைவிருக்கிறது. இனிய நாள்களுக்காக காத்திருப்போம்." என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் நாளைமுதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு! வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு!

பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததா? உண்மை என்ன?

புத்தகப்பையை சுமந்துகொண்டு 100 முறை தோப்புக்கரணம்: பள்ளி மாணவி பலி

செளதி அரேபியாவில் பேருந்து விபத்து: 42 இந்தியர்கள் பலி!

SCROLL FOR NEXT