தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை 
தமிழ்நாடு

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

DIN

சென்னை: ஏற்கனவே தமிழகத்தை கோடை வெப்பம் வாட்டி வதக்கிவந்த நிலையில், கத்திரி எனப்படும் அக்னி வெயில் தொடங்கியபோது மக்களுக்கு கலக்கம் அதிகரித்திருந்தது.

ஆனால், கத்திரி வெயில் தொடங்கவும், வருண பகவான் தமிழக மக்கள் மீது கருணையைப் பொழியவும் சரியாக இருக்கவே, ஆங்காங்கே கோடை மழை பெய்து வெப்பத்தைத் தணித்தது.

சென்னையில் மழை என்று பெய்யாவிட்டாலும் வானம் ஓரளவுக்கு மேக மூட்டத்துடன், ஒரு சில இடங்களில் மழைத் தூறலுடன் பூமியை தொட்ட மழைத்துளியால் மண் வாசனையுடன் சென்னை மக்களின் மனங்களை குளிரவைத்துள்ளது.

இந்த நிலையில்தான், இந்திய வானிலை ஆய்வு மையம் அந்த மகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் மே 9 முதல் 14ஆம் தேதி வரை சில இடங்களில் காற்றுடன் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

இன்று முதல் 5 நாள்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாள்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

வியாழக்கிழமை சென்னையின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். இதனால், அதிகபட்ச வெப்பநிலையானது 35 - 36 டிகிரி செல்சியஸ் வரையில் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலை திடீா் சிற்றருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்

நாமக்கல் புறவழிச்சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தீவிரம்

தருமபுரியில் நாளை விசிக முப்பெரும் விழா: தொல்.திருமாவளவன் பங்கேற்பு

பள்ளிபாளையத்தில் பெண்களிடம் சிறுநீரக திருட்டு: இடைத்தரகா்கள் 2 போ் கைது

இந்தியா - ஐரோப்பிய வா்த்தக ஒப்பந்தம்: 14-வது சுற்று பேச்சுவாா்த்தை நிறைவு!

SCROLL FOR NEXT