பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கமுதி பள்ளி மாணவி காவிய ஜனனி.  
தமிழ்நாடு

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெள்ளிக்கிழமை வெளியான தேர்வு முடிவில் 500-க்கு 499 மதிப்பென் எடுத்து கமுதி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

DIN

கமுதி: பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெள்ளிக்கிழமை வெளியான தேர்வு முடிவில் 500-க்கு 499 மதிப்பென் எடுத்து கமுதி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பேரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளிகளான தர்மராஜ்- வசந்தி தம்பதியின் மூத்த மகளான காவியஜனனி(15). தந்தை திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வருகிறார். தாயார் வசந்தி கமுதியில் உள்ள பலசரக்கு கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார்.

மாணவி காவிய ஜனனி கமுதி ரஹ்மனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி காவிய ஜனனிக்கு பள்ளியின் கல்விச் சங்கத்தின் தலைவர் ஹாஜி வி.என்.எ.அப்துல்லா, நிர்வாகத் அலுவலர் அ.முஹம்மது இர்ஷாத், தாளாளர் ஆயிஷா பீவி, தலைமை ஆசிரியர் வி.என்.பாதுஷா, உதவி தலைமை ஆசிரியை சர்மிளா மற்றும் வகுப்பு ஆசிரியர்கள், பள்ளியின் அலுவலக பணியாளர்கள் மாணவ, மாணவிகள், பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் காவிய ஜனனிக்கு கை குலுக்கி, கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். பொது தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க உறுதுணையாக இருந்த பெற்றோர், பள்ளி நிர்வாகம், தலமையாசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், மேலும் 12 ஆம் வகுப்பில் இதே போன்று அதிக மதிப்பெண் எடுத்து, வருங்காலத்தில் மாவட்ட ஆட்சியர் ஆவதே எனது லட்சியம் என்று மாணவி காவிய ஜனனி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

யெஸ் வங்கியின் 13.1% பங்குகள்: எஸ்பிஐ விற்பனை

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT