முகப்பு
தமிழ்நாடு

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி

தீக்குளித்த விவசாயியை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Updated On : 13 மே, 2024 at 9:10 AM
கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பகலில் விவசாயி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே மருதகுளத்தைச் சேர்ந்த விவசாயி சங்கரசுப்பு (33). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இவரின் சொத்து பிரச்னை குறித்து நான்குனேரி அருகே மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அங்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த சங்கரசுப்பு, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வாசலில் பெட்ரோல் ஊற்றி இன்று தீக்குளித்தார்.

இதனைப் பார்த்த போலீசார் தீயை அணைத்து, சங்கரசுப்புவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →