வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்த மூன்று இளைஞர்கள் மீது இன்று(மே 13) காலை ரயில் மோதி ஒருவர் பலியான நிலையில், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேதாரண்யத்தை சேர்ந்த குமாரசாரதி (18), துளசி நாராயணன் (18), பிரபாகரன் (18) இவர்கள் மூவரும் வடமழை மணக்காடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்றனர்.
அருகில் இருந்த ரயில்வே தண்டவாலத்தில் தூங்கிய நிலையில் இருந்த போது, காலையில் அந்த வ்ழியாகச் சென்ற பயணிகள் ரயிலில் இவர்கள் மீது மோதியது.
இதில்,குமரசாரதி நிகழ்விடத்திலேயே பலியானார். மற்ற இருவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ரயில்வே காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.