தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடா?- எஸ்.பி. வேலுமணி விளக்கம்

DIN

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடா? என்கிற கேள்விக்கு எஸ்.பி. வேலுமணி விளக்கமளித்துள்ளார்.

அதிமுக தலைமை நிலைய செயலாளர், எஸ் பி வேலுமணி கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக உலகத்திலேயே 7வது கட்சி. இந்தியாவில் மிகப்பெரிய கட்சி. எனக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் பிளவு என எழுதுகின்றனர். எங்களுக்குள் எந்த குழப்பமும் கிடையாது. குழப்பம் செய்தவர்கள் எல்லாம் வெளியே போய்விட்டனர். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இணைப்பு சாத்தியமில்லை.

அதிமுகவில், ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை சேர்ப்பது போன்ற பிம்பத்தை சிலர் ஏற்படுத்துகிறார்கள். திமுக ஐடி குழுவினர் தவறான செய்திகளை பரப்புவதாகவும், அதனை ஊடகங்களும் செய்திகளாக பதிவிடுகின்றன. அதிமுகவின் பல்வேறு உக்கட்சி பூசல்கள் இருப்பதாக பல ஊடகங்கள் கற்பனையாக செய்திகளை வெளியிடுகின்றன. கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி காப்பாற்றி வருபவர் எடப்பாடி பழனிச்சாமி.

கட்சிக்குள் எந்த பிரச்னை வந்தாலும், அனைத்து மூத்த நிர்வாகிகளிடமும் கலந்து ஆலோசித்த பின்பு, எடப்பாடி பழனிச்சாமி எந்த முடிவும் எடுப்பார். கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை பொறுப்பு ஏற்ற, உடன் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவள் ஒரு கலை... பூஜா ரெய்னா!

ஒன்று சொல்லவா... ஷீபா!

கடல் தீரம்... மோனலிசா!

வன மேகம்... பாப்பியா சஹானா!

ட்வின்ஸ்... ஆஷிகா ரங்கநாத்!

SCROLL FOR NEXT