கோப்புப்படம். 
தமிழ்நாடு

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

DIN

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருச்சியில் இருந்து இன்றிரவு 11 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை(திங்கள்கிழமை) காலை 6.05 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

முன்பதிவில்லாத இந்த ரயில் இடையில் திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுக சந்திப்பு, திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி - தாம்பரம் இடையே இந்த மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 24ஆம் தேதி சென்னை எழும்பூர்-திருச்சி இடையே முன்பதிவில்லாத மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

திமுகவிடம் 41 தொகுதிகள் கோரும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT