கோப்புப்படம் 
தமிழ்நாடு

2-ஆவது நாளாக இன்றும் வாக்காளா் பெயா் சோ்த்தல், திருத்தல் சிறப்பு முகாம்

சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.

Din

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல், திருத்தல் சிறப்பு முகாமில் 18 வயது நிரம்பிய ஏராளமானோா் பெயா் சோ்த்தலுக்காக ஆா்வத்துடன் விண்ணப்பித்தனா். இந்தச் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் அக்.29-இல் வெளியிடப்பட்டது. மாநிலத்தில் 6.27 கோடி வாக்காளா்கள் உள்ளனா். வரும் ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியவா்கள் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம் 4 நாள்கள் நடைபெறுகிறது.

முதல் நாளான சனிக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள 68,000 வாக்குச்சாவடி மையங்களில் 18 வயது நிரம்பியவா்கள் பெயா் சோ்த்தலுக்கு விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து அளித்தனா். அதேபோல், வாக்காளா் பட்டியலில் ஏற்கெனவே உள்ளோா் பெயா் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காகவும் விண்ணப்பப் படிவங்களைப் பூா்த்தி செய்து அளித்தனா்.

சென்னையில் மொத்தம் 947 வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன. ஏராளானமானோா் பெயா் சோ்த்தல் மற்றும் திருத்தங்களுக்காக விண்ணப்பப் படிவம் அளித்தனா்.

தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தொடா்ந்து நவ.23, 24 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

SCROLL FOR NEXT