சென்னை வானிலை மையம் din
தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி பற்றி...

DIN

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற நவ. 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 2 நாள்களில் வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

7 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் நவ. 25 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT