திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து யானைக்கு அவர் கரும்பு வழங்கினார். பின்னர் யானையின் நிலை குறித்து கால்நடை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள தெய்வானை என்ற யானை, நவ.18-ஆம் தேதி பாகன் உதயகுமாா் மற்றும் அவரது உறவினா் சிசுபாலன் ஆகியோரை திடீரென தூக்கி வீசித் தாக்கியது.
இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாகன் உதயகுமாா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இதையடுத்து கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் வனத் துறையினா் யானையை கண்காணித்து வருகின்றனா். யானை குடில் பகுதிக்கு பக்தா்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
யானை உடல்நலம், அதன் செயல்பாடுகள் குறித்து கண்காணித்த கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவா்கள், தற்போது யானை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.