முகப்பு
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி

டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 8:30 PM
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக டெங்கு, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

எனவே, சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலா்கள் இணைந்து, மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று வீடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் மழைநீா் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், தொடா்ந்து கொசு மருந்து அடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவைப்படும் அனைத்து மருந்துகளையும் இருப்பில் வைத்திருக்கவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →