கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளான ரயில் 
தமிழ்நாடு

திருவள்ளூர் ரயில் விபத்து: தர்பங்கா செல்ல சிறப்பு ரயில்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தர்பங்கா செல்ல சிறப்பு ரயில்...

DIN

மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது சரக்கு ரயில் மீது மோதியது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கோர விபத்தில் நல்வாய்ப்பாக இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. காயமடைந்த பயணிகள் ஆம்புலன்சில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தர்பங்கா செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும், கவரப்பேட்டையிலிருந்து மின்சார ரயில்கள் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அதன்பின் அங்கிருந்து சிறப்பு ரயிலில் பயணிகளை தர்பங்காவுக்கு அனுப்பிவைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயிலில் பயணிகளை அனுப்பிவைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

மடிக்கணினி திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் முழுமை பெறும்: அமைச்சா் கோவி. செழியன்

தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதிகம்: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT