மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17, 586 கன அடியாக குறைந்தது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 18,094 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 17,586 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 97.89 அடியிலிருந்து 98.56 அடியாக உயர்ந்துள்ளது.
தற்போது அணையில் நீர் இருப்பு 62.99 டிஎம்சியாகவுள்ளது. அணைப்ப்குதியில் 62.2 மி.மீ அளவுக்கு மழைபெய்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை நெருங்கி வருவது டெல்டா விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.