மத்திய அமைச்சரின் இந்தி கடிதத்திற்கு தமிழில் திமுக எம்.பி. பதில்
மத்திய அமைச்சரின் இந்தி கடிதத்திற்கு திமுக எம்.பி. அப்துல்லா தமிழில் பதிலளித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்தி கடிதத்திற்கு திமுக எம்.பி. அப்துல்லா தமிழில் பதிலளித்துள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த தி.மு.க எம்.பி. அப்துல்லா ரயில்வே வழங்கும் உணவின் தரம், தூய்மை உள்ளிட்டவை குறித்து மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளை முன்வைத்து பேசியிருந்தார்.
இதற்கு மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ரவ்நீத் சிங், கடிதம் வாயிலாக திமுக எம்.பி. அப்துல்லாவிற்கு கடந்த 21ஆம் தேதி பதில் அளித்தார்.
Advertisement
Advertisement
விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர்க்காப்பீடு- தமிழக அரசு
இந்த நிலையில் மத்திய அமைச்சரின் கடிதத்திற்கு, தனக்கு இந்தி புரியவில்லை என்று திமுக எம்.பி. அப்துல்லா தமிழில் பதிலளித்துள்ளார். அதில், வணக்கம்! நலம் விளைகிறேன்.
தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். எனக்கு இந்தி மொழி தெரியாத காரணத்தால் அதில் என்ன எழுதி உள்ளீர்கள் என எனக்குத் தெரியவில்லை.
எனவே அடுத்த முறை கடிதம் அனுப்பும் போது ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இரண்டு கடிதங்களின் நகலையும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அப்துல்லா பகிர்ந்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.