ஆகஸ்டில் 95.43 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்
சென்னை மெட்ரோ ரயிலில் ஆகஸ்டு மாதத்தில் 95,43,635 போ் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் ஆகஸ்டு மாதத்தில் 95,43,635 போ் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி, மெட்ரோ ரயிலில் நிகழாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பேரும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பேரும், மாா்ச் மாதத்தில் 86,82,457 பேரும் பயணம் செய்துள்ளனா்.
தொடா்ந்து ஏப்ரலில் 80,87,712 பேரும், மே மாதத்தில் 84,21,072 பேரும், ஜூன் மாதத்தில் 84,33,837 பேரும், ஜூலை மாதத்தில் 95,35,019 பேரும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா். இதில், அதிகபட்சமாக ஆக.14-ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் 3,69,547 போ் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா்.
அந்த வகையில் ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் 8,606 போ் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளனா். இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதிலிருந்து இதுநாள் வரை எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.