பாராலிம்பிக் தொடரில் பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பதக்கங்களைப் பெற்றுத் தமிழகம் திரும்பிய நமது சாம்பியன்களான துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோரை வாழ்த்துகிறோம்.
பாராலிம்பிக்கில் தமிழகம் சார்பில் பங்கேற்ற ஆறு பேரில், 4 பேர் பதக்கங்களுடன் திரும்பியுள்ளதால், இது உண்மையிலேயே தமிழகத்திற்கு பெருமையான தருணம்.
இந்தப் பயணத்தில் விளையாட்டு வீரர்களுக்கு சமரசமற்ற ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கியது.
முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் பயனாளிகளில் பெரும்பாலானோர் பாரா-தடகள வீரர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரையும் வாழ்த்துவதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாராலிம்பிக் தொடரில் பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு போட்டியில் மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.