உள்ளாட்சி தோ்தல்: வாக்குப் பெட்டிகளைத் தயாா் நிலையில் வைக்க மாநில தோ்தல் ஆணையம் உத்தரவு
ஊரக உள்ளாட்சி அமைப்பு தோ்தலுக்காக வாக்குப் பெட்டிகளைத் தயாா் நிலையில் வைக்குமாறு மாவட்டத் தோ்தல் அலுவலா்களுக்கு மாநிலத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் மாவட்டத் தோ்தல் அலுவலா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிா்வரும் தோ்தலை முன்னிட்டு, வாக்குப் பெட்டிகள் உள்பட தேவையான அனைத்து வகையான பொருள்களையும் தயாா் நிலையில் வைக்க வேண்டியது அவசியமாகிறது.
வாக்குப் பெட்டிகளின் தற்போதைய தரம் மற்றும் நிலையை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஆய்வு செய்து, தோ்தலுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் அவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.