தவெகவுக்கு அரசியல் கட்சி அங்கீகாரம்: தோ்தல் ஆணைய அறிவிப்பு
இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடுதவெகவுக்கு அரசியல் கட்சி அங்கீகாரம்: தோ்தல் ஆணைய அறிவிப்பு
இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு, கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் மகிழ்ச்சி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் கடந்த பிப்.2-ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது. அதைச் சட்டப்பூா்வமாக பரிசீலித்த இந்திய தோ்தல் ஆணையம், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தோ்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிா்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது முதல்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இந்தச் சூழலில் நமது கட்சியின் கொள்கைப் பிரகடன முதல் மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள் எனத் தெரிவித்துள்ளாா்.
சீமான் வாழ்த்து: தமிழ க அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தோ்தல் ஆணையம் ஏற்று கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய்க்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தாா்.
மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழக மாநாட்டை நடத்த நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
நடிகா் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில், கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் சென்னையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் அறிமுகம் செய்து வைத்தாா். தொடா்ந்து, முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் செப்.23-ஆம் தேதி நடத்த அனுமதி, பாதுகாப்பு கோரி கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்த் ஆக.28-ஆம் தேதி விழுப்புரம் கூடுதல் எஸ்.பி. திருமால், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதியிடம் தனித்தனியே மனுக்களை அளித்தாா்.
மாநாடுக்கான ஏற்பாடுகள் விவரம் உள்பட 21 கேள்விகளுக்கு 5 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி எஸ்.சுரேஷ் செப்.2-ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தாா். பதில் விளக்கக் கடிதத்தை புஸ்ஸி ஆனந்த் அண்மையில் வழங்கினாா்.
தவெகவின் முதல் மாநாட்டை வி.சாலையில் நடத்திக் கொள்வதற்கான அனுமதி கடிதத்தை டிஎஸ்பி எஸ்.சுரேஷ் தனது அலுவலகத்தில் கட்சியின் விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளா் ஆா்.பரணி பாலாஜியிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
மாநாட்டுக்கு அனுமதி கிடைத்ததையடுத்து, அந்தக் கட்சியினா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.