காற்றழுத்த தாழ்வு மண்டலம் 
தமிழ்நாடு

இன்று கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

மேற்கு வங்காள கடற்கரையை பூரி(ஒடிசா) தீகா(மேற்கு வங்காளம்) இடையே கரையை கடக்கிறது புயல்..

DIN

மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

செப்.7ல் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தாழ்வு பகுநதி செப்.8 காலை 5.30 மணியளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு-வடமேற்கு திசையில நகர்ந்து செப் 8 காலை 8 மணியளவில் கலிங்கப்பட்டினத்திற்கு(ஆந்திரம்) கிழக்கே 280 கி.மீ கோபால்பூற்கு(ஒடிசா) கிழக்கு-தென்கிழக்கே 230 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா - மேற்கு வங்காளம் கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலாக வலுப்பெறக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று(செப்.9) மாலை/இரவில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை பூரி(ஒடிசா) தீகா(மேற்கு வங்காளம்) இடையே கடக்க உள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் செப்.14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. ஏ அணி!

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆஜர்!

SCROLL FOR NEXT