தமிழகத்தில் செப்.16 வரை மிதமான மழை வாய்ப்பு
தமிழகத்தில் வானிலை நிலவரம் பற்றி...
தமிழ்நாடுதமிழகத்தில் செப்.16 வரை மிதமான மழை வாய்ப்பு
தமிழகத்தில் வானிலை நிலவரம் பற்றி...
தமிழகத்தில் செப். 16-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இம்மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் புதன் முதல் திங்கள்கிழமை (செப். 11-16) வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பந்தலூா் (நீலகிரி), கிருஷ்ணகிரி தலா 40, மேல் கூடலூா், கூடலூா் பஜாா் (நீலகிரி), சின்கோனா, வால்பாறை, சின்னக்கல்லாா், சோலையாா் (கோவை), ஆனைமடுவு அணை (சேலம்), பெரியாறு (தேனி) தலா 30 மி.மீ.
தமிழக கடலோரப் பகுதியில் புதன் முதல் சனிக்கிழமை (செப். 11-14) வரை மன்னாா் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறைக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.