முகப்பு
தமிழ்நாடு

தனித்து நிற்பதால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை: சீமான்!

தனித்து நிற்பதால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 8:47 AM
சீமான்
பகிர்:

தனித்து நிற்பதால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நன்றாகத்தான் இருக்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் பேச்சு

புதுக்கோட்டையில் புதன்கிழமை சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கெல்லாம் விஜய் மாலை அணிவித்திருக்கிறார். அதேபோல, திரு.வி.க., மறைமலை அடிகள், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் போன்ற தமிழ் அறிஞர்களையும் விஜய் போற்ற வேண்டும்.

காங்கிரஸ் நாயை புதைத்து விடுவேன்! சிவசேனை எம்எல்ஏவின் அடுத்த சர்ச்சை!

அவரோடு கூட்டணி அமைப்பீர்களா? என என்னையே திரும்பத் திரும்ப கேட்கிறீர்கள். மாநாடு நடத்தி முடித்த பிறகு, விஜய் செய்தியாளர்களை சந்திப்பார். சீமானுடன் கூட்டணி அமைப்பீர்களா? என்று அவரிடம் கேளுங்கள்.

நான் நன்றாக இருக்கிறேன்

என்னைப் பொருத்தவரை இந்திய தேசியர்களுடனும், திராவிடர்களுடனும் கூட்டணி இல்லை. தனித்தே நிற்பதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். என் தம்பிகளும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

மாநிலங்களுக்கான உரிமைகள் பற்றி திமுகவினர் பேசுகிறார்கள். கல்வி உள்ளிட்ட எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன.

மோடியை சந்திக்கிறார் டிரம்ப்!

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டதாகவே கூறிக்கொண்டிருக்காமல், மக்களவைத் தேர்தலில் 40 உறுப்பினர்களை வென்றிருக்கிறீர்கள். எல்லாவற்றையும் மீட்டு வாருங்கள்.

75 ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறீர்கள். ஆனால் மக்கள் திண்டாடுகிறீர்கள் என்றார் சீமான்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் நீங்கள் சர்வாதிகாரியாக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், “குற்றச்சாட்டு தானே, நிரூபிக்கப்பட்ட குற்றமில்லை. முதிர்ந்த பட்டை உதிர்ந்தால் தான் புதிய இலைகள் துளிர்க்கும். எனவே இதுபோன்றவற்றைக் கேட்காதீர்கள். விடுங்க' என்றார்.

இஸ்ரேலின் வெறியாட்டம்! பேஜர்கள் வெடித்த விவகாரத்தில் லெபனான் குற்றச்சாட்டு

முழு கட்டுரையைப் படிக்க →