பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பல் சிங், பேரவைத் தலைவர் குல்தர் சிங் மற்றும் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் ஆகியோர் மருத்துவமனையில் பகவந்த் மானை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
காங்கிரஸ் எம்எல்ஏ பர்ஹத் சிங்கும் மருத்துவமனையில் முதல்வரை சந்தித்தார்.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நெல் கொள்முதல் ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்கான கூட்டத்திற்கு பகவந்த் மான் அழைப்பு விடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மாலை 5 மணிக்கு அவரது இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
50 வயதான பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு சனிக்கிழமை பாக்டீரியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.