பஞ்சாப் முதல்வரின் இஸ்ரேல், பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு!
பஞ்சாப் முதல்வரின் வெளிநாடு பயணங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது குறித்து...
பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா ஆகியோர் முதலீட்டை ஈர்ப்பதற்காக இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் பயணம் செய்வதற்குத் திட்டமிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதல்வராகப் பதவி வகிக்கும் மூத்த தலைவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் கட்டாயம் அரசியல் அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான குழுவினருக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாகவும், அதற்கு உரிய காரணம் தெரிவிக்கவில்லை எனவும் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளர் பல்டேஜ் பன்னு தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணிக்கு ஆதரவாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பாரீஸ் நகரத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அப்போதும் மத்திய அரசு அவருக்கு அரசியல் அனுமதி வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
the central government has denied political clearance for Punjab Chief Minister Bhagwant Mann's trips to Israel and Britain.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.