கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு

தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்ந்துள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்துள்ளது.

Din

தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்ந்துள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் ஒருங்கிணைந்த பிணந்தின்னிக் கழுகுகள் கணக்கெடுப்புப் பணிகள் கடந்த பிப்.27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.

முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெல்லை வன உயிரின சரணாலயம் உள்பட 33 இடங்கள் என 3 மாநிலங்களையும் சோ்த்து மொத்தம் 106 இடங்களில் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தரவுகளை ஆய்வு செய்ததில் 3 மாநிலங்களில் 390 பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளதாக மதிப்பிட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 157 பிணந்தின்னிக் கழுகுகள் கண்டறியப்பட்டன. அதில் அதிகபட்சமாக 110 வெண்முதுகு வகை பிணந்தின்னிக் கழுகுகள், நீண்ட மூக்கு பிணந்தின்னிக் கழுகுகள் - 31, செம்முக பிணந்தின்னிக் கழுகுகள் - 11 மற்றும் எகிப்தியன் பிணந்தின்னிக் கழுகுகள் - 5 கண்டறியப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

பல்கலை. கபடி: மேலவாசல் கல்லூரிக்குப் பாராட்டு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT